Posts

Showing posts from June, 2023

இன்று சேலத்தில் பார்த்து ரசித்த பம்பாய் மிட்டாய் 🍭

Image
சிறுவயதில் தன்னுடைய குழந்தைகளுக்கு இணையத்தில் தேடியும் முடியவர்களிடம் கேட்டும் தெரிந்துகொண்டு சில இயற்கை உணவு போன்று சத்தான உணவை தன்னுடைய குழைந்தைக்கு தரவேண்டும் என்பது ஒவ்வொரு தாயின் எண்ணம்.. ஆனால்  குழைந்தைகள் எண்ணமோ சிலவகை தின்பண்டங்கள்,அதிலும் மிகவும் பிடித்தமான ஒன்று மிட்டாய் வைகைகள்.. இன்று இந்த "பம்பாய் மிட்டாய்" மற்றும் அந்த மிட்டையை வியாபாரம் செய்துகொண்டிருந்த தாத்தாவை பார்த்தும் பழைய நினைவுகள் வந்தது..அந்த மிட்டாயில் நிறைய வகையான பொம்மைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார்.. நான் அவரிடம் வயதான காலத்தில் ஏன் இப்படி கஷ்டப்பட்டு வெயிலில் விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டேன்.. அவர் சொன்னது:  (எனக்கு வயது 80 ஆகிறது) கடைசிவரைக்கும் நான் யாருக்கும் எந்த தொந்தருவும் செய்யாமல் இருக்கவும், நானும் என்னுடைய மனைவியும் உண்ண தேவையான பணத்தை நானே சம்பரித்து என்னுடைய மகனிடம் ஒப்படைதுவிடுவேன்.. மிட்டாய் விற்பது என்னுடைய 20 ஆண்டுகால தொழில், "நான் 5 பைசாவில் ஆரம்பித்து இன்ற  10 ரூபாய்க்கு தருகிறேன்" அதில் லாபம் குறைவுதான், ஆனால் மனநிம்மதி அதிக லாபம் கிடைக்கும் தொழிலைவிட அதிகம் ஏனென

கனவுகள் நினைவாகும் போது நான் நேரில் பார்த்தது👏

Image
இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நிறைய தேவைகள் மற்றும் அசைகள் உள்ளது,அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதில் நான் பார்த்த எனக்கு நெருங்கிய நண்பன் அவனது கனவு,தேவை, இலட்சியம் எல்லாமே ஒரு (புகைப்பட கேமரா) விஷ்ணு தனது 17 வயதிலிருந்து புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்தது அதன் காரணமாகவே அவருக்கு கேமரா மீதான ஆர்வம் காலம் செல்ல செல்ல அதிகரித்து கொண்டு இருந்தது, பிறகு தனது ஆர்வத்தை கைவிடாமல்  படிப்பையும் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்தான்.. தனது குடும்பம் இந்த சமூகத்தில் (middle class) நிலைமையில் இருந்ததால் தனது கல்லூரி படிப்பை முடித்து கொண்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தான்,  பிறக்கும் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருந்து கொண்டு இருந்தது ,செய்து கொண்டிருந்த பணியிலிருந்து வரும் பணத்திலிருந்து ஒரு பங்கு பணத்தை எடுத்துகொண்டு மீதி பணத்தை தன்னுடைய குடும்ப செலவிற்கு கொடுத்துவந்தான், இரண்டு வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மனநிறைவுடன் கேமரா வாங்குவதற்கு பணத்துடன் தன்னுடைய நண்பர்களுடன் புறப்பட்டான், பின்னர்(train) போகும் வழியில் கனவு நிறைவேறுவது பற்றியே பேசிக்கொண்டு சுமார் 8 ம

நான் செல்லும் வழியில் பார்த்த வீட்டு பலகாரம்

Image
நான் சென்று கொண்டிருந்த வழியில் விறகு அடுப்பில் பலகாரம் செய்த அந்த அம்மா கூறியது: நமது வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உணவை தாண்டி ஏதேனும் ஒரு நொறுக்கு தீனி தேவைப்படுகிறது அதை மளிகை கடைகளில் சென்று வாங்கி உட்கொண்டு பிறகு குழந்தைகளுக்கு வாங்கி வருகின்றனர். அதற்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருள் அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் தயாரிக்க படுகிறது குறிப்பாக (எண்ணெய்),(மாவு) மற்றும் அதை ஒரு கவரில் அடைத்து கொண்டு விற்பனை செய்கின்றனர் அது உடலுக்கு ஆரோக்கியமற்றது இருக்கும் என்று கூறினார்.. மேலும் அவர்களின் வீட்டிலும் அவர்களின் உறவினர் வீடுகளிலும் அவர்களுக்கு தேவையான தின்பண்டங்களை அவர்களே செய்து தன்னுடைய குழைந்தைகளுக்கு தருவார்களாம்.. என்னுடைய கருத்து: அம்மா சொன்னபடி நம்முடைய குழைந்தைகளின் உடல்நலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோர்களின் கடமை.. முடிந்த அளவிற்கு துரித உணவுகள் மற்றும் மைதா சேர்த்து கடை உணவுகள் தவிர்த்து வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதே சரயானதாகும்.. 20 மேற்பட்ட ஆண்டுகளாக முடிந்தவரை வீட்டு உணவையே எடுத்து கொலகிரோம்  என்று அவர் கூ

நேற்று இரவு நான் பார்த்ததும் ரசித்ததும்👏

Image
நேற்று இரவு மோட்டுர் என்னும் கிராமத்தில் நடந்த பாடல் நிகழ்சியில் சினிமா பாடல்களை பாடியும் ஆடியும் கிராம மக்களை தன்வசம் வைத்திருந்தது அவர்களின் கலைவண்ணம்🤝 ஒரு ஒரு பாடல் காட்சியின் முடிவிலும் ஒருவர் மைக்கை எடுத்து நடனம் (பிடித்தமானதாக இருந்ததா) என்று கூறுவதும் அதை மக்கம் நல்லா இருக்கு என்று சொல்வதும் அந்த இடத்தில் ரசிக்கும்படியாக இருந்தது😊 (அவர்களின் தேவை என்ன என்று நான் கேட்டதும் கிராமத்தில் ஒருவர் சொன்னது என் மனதை கவர்ந்தது)  1. முதலில் இவர்களை நாம் தேடி போகவில்லை,அவர்கள் தான் நம்மை தேடி வந்தார்கள் என்று நாம் உணரவேண்டும்.. 2. அவர்களின் முக்கிய தேவை (கைதட்டல்) (விசில் சத்தம்) மற்றும் (நிறைய மக்கள் கூட்டம்) கூட்டமாக வந்து அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதை பார்பது.. 3.பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தேவையான          1.உணவு          2.உடை          3.வாழ்வாதாரத்திற்கு தேவையான      பணம் அதை நம்மால் முடிந்த அளவு கிராம மக்கள் அணைவரும் சேர்ந்து உதவ வேண்டும் என்றார் அந்த நபர்👏👏 இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்களுக்கு இரவு உணவு கிராம மக்களிடம் வாங்கி உட்கொண்டு பிறகு மனநிறைவுடன் புற

இன்று பார்த்தது மண்ணெண்ணெய் அடுப்பு 😊

Image
நவீன காலம் வந்தாலும் இன்றும் பழமையை விரும்பும் மக்கள் இன்றும் உள்ளனர் இந்த அடுப்பு இன்றும் பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் பலவீடுகளில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது.  அடுப்பின் இயக்கம்: இந்த அடுப்பின் முக்கிய மூலப்பொருள்        1.மண்ணெண்ணெய்        2.திரி(பருத்தி ஆடை திரி) அடுப்பில் மண்ணெண்ணெய் அடிப்பகுதியில் ஊற்றி திரியை எண்ணெயில் படும்படி வைத்து மேல்நோக்கி வைத்து தீயின் மூலம் பற்றவைத்து அடுப்பை இயக்க வேண்டும்.. அடுப்பின் பயன்பாடு: இந்த அடுப்பை மின்சார உபகரணங்கள் இல்லாத நிலையில் இயக்க முடியும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எலிதாக இயக்கமுடியும் இந்த அடுப்பை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது மிகவும் எளிது.. ஏதேனும் குடும்ப விழா மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு சுற்றுலா செல்லும்போது இந்த அடுப்பை சுலபமாக எடுத்துச்செல்ல முடியும்  மனித வாழ்வில் குறிப்பிடும்படியான செயல்களில் ஒன்று (உண்ண உணவு) அதை தயற்செய்ய தேவைப்படும் அனைத்துமே நமக்கு தேவையான அடிப்படை. குறிப்பு: மனித வாழ்வில் மிகமுக்கியமான ஒன்று உண்ண உணவு அதை நன்கு வேகவைத்து மசித்து இயற்க்கை உணவிவுகளை சே

பருத்தி தோட்டத்தை எங்கள் ஊரின் பார்த்ததும் :

Image
  பருத்தியில் மிக அதிகமாக மருத்துவ குணங்களும் தொழில் வளர்ச்சியில் மிக அதிக பங்கும் வகிக்கிற ஒரு பயிர் வகைகளில் பருத்தியின் பங்கு மிக முக்கியமானது. மேலும் பருத்தி சாகுபடியில் 1.குஜராத் 2.மகாராஷ்டிரா 3.தெலுங்கானா 4.ஆந்திர பிரதேஷ் 5.மத்திய பிரதேஷ் 6.கர்நாடகா 7.ஹரியானா 8.ராஜஸ்தான் 9.பஞ்சாப் 10.ஒடிசா 10 மாநிலங்கள் மிகவும் பருத்தி உற்பத்தி அதிக அளவில் செய்கிறது மேலும் தமிழ்நாட்டிலும் அதிக அளவில் பருத்தி உற்பத்தி செய்து கொண்டு வருகிறது ஒரு குறிப்பாக சேலம் மாவட்டத்திலும் அதிக இடங்களில் பருத்தி சாகுபடி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த பருத்தி தோட்டம் எங்கள் ஊரில் தற்போது விளைந்து கொண்டிருக்கிறது விவசாயிகளின் கடின கடின உழைப்பினால் நிலங்களை உழுது பருத்தி கொட்டைகளை விளைத்து பருத்திச் செடியை பராமரித்து வருகின்றனர். பருத்தியின் வர்த்தகம்: பருத்திச் செடியின் மூலம் பருத்தியை  விவசாயிகள் உற்பத்தி செய்வதன் மூலம் சுமார் இந்தியாவில் 40 - 50 மில்லியன் மக்கள் இதை நம்பி பணியாற்றுகின்றனர். பருத்திக் கொட்டையை விளைத்து அதை விளைந்து பின் விவசாயிகளிடம் இருந்து அதைப் பெற்றுக் கொண்டு வியாபாரிகள் அதை விற்பதன