நேற்று இரவு நான் பார்த்ததும் ரசித்ததும்👏

நேற்று இரவு மோட்டுர் என்னும் கிராமத்தில் நடந்த பாடல் நிகழ்சியில் சினிமா பாடல்களை பாடியும் ஆடியும் கிராம மக்களை தன்வசம் வைத்திருந்தது அவர்களின் கலைவண்ணம்🤝

ஒரு ஒரு பாடல் காட்சியின் முடிவிலும் ஒருவர் மைக்கை எடுத்து நடனம் (பிடித்தமானதாக இருந்ததா) என்று கூறுவதும் அதை மக்கம் நல்லா இருக்கு என்று சொல்வதும் அந்த இடத்தில் ரசிக்கும்படியாக இருந்தது😊
(அவர்களின் தேவை என்ன என்று நான் கேட்டதும் கிராமத்தில் ஒருவர் சொன்னது என் மனதை கவர்ந்தது) 

1. முதலில் இவர்களை நாம் தேடி போகவில்லை,அவர்கள் தான் நம்மை தேடி வந்தார்கள் என்று நாம் உணரவேண்டும்..

2. அவர்களின் முக்கிய தேவை (கைதட்டல்) (விசில் சத்தம்) மற்றும் (நிறைய மக்கள் கூட்டம்) கூட்டமாக வந்து அவர்களின் திறமையை வெளிப்படுத்துவதை பார்பது..

3.பிறகு அவர்களின் அன்றாட வாழ்வில் தேவையான

         1.உணவு

         2.உடை

         3.வாழ்வாதாரத்திற்கு தேவையான      பணம் அதை நம்மால் முடிந்த அளவு கிராம மக்கள் அணைவரும் சேர்ந்து உதவ வேண்டும் என்றார் அந்த நபர்👏👏


இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர்களுக்கு இரவு உணவு கிராம மக்களிடம் வாங்கி உட்கொண்டு பிறகு மனநிறைவுடன் புறப்பட்டு செண்டறனர்

குறிப்பு:

என்னதான் மனிதர்களுக்கு ஆயிரம் தேவை இருந்தாலும் சிறிய வயது குழைந்தைகளை இதில் பயன்படுத்தாமல் அவர்களுக்கு உரிய கல்வி வழங்க வேண்டும் ஏனென்றால் 

      அதிகாரம்:40

       கல்வி

      திருக்குறள்:400

கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றவை யவை.

(ஒருவனுக்கு அழியாத சிறந்த செல்வம் கல்வி,அதை தவிர மற்றவை அனைத்துமே செல்வங்கள் இல்லை)🤝

Comments

KARTHIK SELVARAJ

பருத்தி தோட்டத்தை எங்கள் ஊரின் பார்த்ததும் :

கனவுகள் நினைவாகும் போது நான் நேரில் பார்த்தது👏

இன்று பார்த்தது மண்ணெண்ணெய் அடுப்பு 😊

இன்று சேலத்தில் பார்த்து ரசித்த பம்பாய் மிட்டாய் 🍭

நான் செல்லும் வழியில் பார்த்த வீட்டு பலகாரம்