கனவுகள் நினைவாகும் போது நான் நேரில் பார்த்தது👏

இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் நிறைய தேவைகள் மற்றும் அசைகள் உள்ளது,அது என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் அதில் நான் பார்த்த எனக்கு நெருங்கிய நண்பன் அவனது கனவு,தேவை, இலட்சியம் எல்லாமே ஒரு (புகைப்பட கேமரா)

விஷ்ணு தனது 17 வயதிலிருந்து புகைப்படம் எடுக்கும் பழக்கம் இருந்தது அதன் காரணமாகவே அவருக்கு கேமரா மீதான ஆர்வம் காலம் செல்ல செல்ல அதிகரித்து கொண்டு இருந்தது, பிறகு தனது ஆர்வத்தை கைவிடாமல்  படிப்பையும் கைவிடாமல் தொடர்ந்து முயற்சி செய்தான்..

தனது குடும்பம் இந்த சமூகத்தில் (middle class) நிலைமையில் இருந்ததால் தனது கல்லூரி படிப்பை முடித்து கொண்டு ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தான், 

பிறக்கும் புகைப்படம் எடுக்கும் ஆர்வம் இருந்து கொண்டு இருந்தது ,செய்து கொண்டிருந்த பணியிலிருந்து வரும் பணத்திலிருந்து ஒரு பங்கு பணத்தை எடுத்துகொண்டு மீதி பணத்தை தன்னுடைய குடும்ப செலவிற்கு கொடுத்துவந்தான், இரண்டு வருடங்கள் இடைவெளிக்கு பிறகு மனநிறைவுடன் கேமரா வாங்குவதற்கு பணத்துடன் தன்னுடைய நண்பர்களுடன் புறப்பட்டான்,

பின்னர்(train) போகும் வழியில் கனவு நிறைவேறுவது பற்றியே பேசிக்கொண்டு சுமார் 8 மணிநேர பயணத்தை முடித்து கொண்டு கர்நாடகாவில் இறங்கினர்,
காலையில் உணவு சாப்பிட்ட பிறகு கேமரா வாங்கும் கடைக்கு சென்றனர் கேமராவை பார்த்த பிறகு (தன்னுடைய உழைப்பால் சிறுக சிறுக சேமித்த பணத்தை) எடுத்து கடைக்காரரிடம் தந்தான்

பிறகு தனக்கு சொந்தமான கேமராவை பெற்றுக்கொண்டு தன்னுடைய நண்பர்களுடன் மீண்டும் தனுது இல்லத்திற்கு வந்து தன்னுடைய அம்மா அப்பாவிடம் அதை காண்பித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்,
அவனுக்கு பிடித்த ஒரு செயல் நடந்த காரணம் "விஷ்ணு" பொறுமையுடன் இருந்தது மட்டுமே,

குறிப்பு:
நாம் நம்முடைய வாழ்வில் எதற்கு வேண்டுமானாலும் ஆசை படலாம் ஆனால், அதை எப்படி சரியான முறையில் செயல்படுகிறோம் என்பதிலே நம்முடைய வெற்றியும், தோல்வியும் உள்ளது,
1.பொறுமை
2.நிதானம்
3.பொறுமை
4.சகிப்பு
ஆகியவற்றை அகும்...


Comments

KARTHIK SELVARAJ

பருத்தி தோட்டத்தை எங்கள் ஊரின் பார்த்ததும் :

இன்று பார்த்தது மண்ணெண்ணெய் அடுப்பு 😊

இன்று சேலத்தில் பார்த்து ரசித்த பம்பாய் மிட்டாய் 🍭

நான் செல்லும் வழியில் பார்த்த வீட்டு பலகாரம்

நேற்று இரவு நான் பார்த்ததும் ரசித்ததும்👏