இன்று சேலத்தில் பார்த்து ரசித்த பம்பாய் மிட்டாய் 🍭

சிறுவயதில் தன்னுடைய குழந்தைகளுக்கு இணையத்தில் தேடியும் முடியவர்களிடம் கேட்டும் தெரிந்துகொண்டு சில இயற்கை உணவு போன்று சத்தான உணவை தன்னுடைய குழைந்தைக்கு தரவேண்டும் என்பது ஒவ்வொரு தாயின் எண்ணம்.. ஆனால்  குழைந்தைகள் எண்ணமோ சிலவகை தின்பண்டங்கள்,அதிலும் மிகவும் பிடித்தமான ஒன்று மிட்டாய் வைகைகள்..


இன்று இந்த "பம்பாய் மிட்டாய்" மற்றும் அந்த மிட்டையை வியாபாரம் செய்துகொண்டிருந்த தாத்தாவை பார்த்தும் பழைய நினைவுகள் வந்தது..அந்த மிட்டாயில் நிறைய வகையான பொம்மைகளை உருவாக்கி விற்பனை செய்கிறார்..

நான் அவரிடம் வயதான காலத்தில் ஏன் இப்படி கஷ்டப்பட்டு வெயிலில் விற்பனை செய்கிறீர்கள் என்று கேட்டேன்..

அவர் சொன்னது: 

(எனக்கு வயது 80 ஆகிறது) கடைசிவரைக்கும் நான் யாருக்கும் எந்த தொந்தருவும் செய்யாமல் இருக்கவும், நானும் என்னுடைய மனைவியும் உண்ண தேவையான பணத்தை நானே சம்பரித்து என்னுடைய மகனிடம் ஒப்படைதுவிடுவேன்..

மிட்டாய் விற்பது என்னுடைய 20 ஆண்டுகால தொழில், "நான் 5 பைசாவில் ஆரம்பித்து இன்ற  10 ரூபாய்க்கு தருகிறேன்" அதில் லாபம் குறைவுதான், ஆனால் மனநிம்மதி அதிக லாபம் கிடைக்கும் தொழிலைவிட அதிகம் ஏனென்றால்..

நான் இரவில் மிட்டாய் செய்து விட்டு காலையில் கிளம்பும்போது அந்த கிராமங்களில் உள்ள சிறு வயதில் உள்ள அனைத்து குழந்தைகளும் மிட்டாய் தாத்தா என்று அழைப்பது எனக்கு அவ்வளவு மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும் அதனால் இன்று வரை இந்த மிட்டாய் தொழில் மட்டுமே செய்து வருகிறேன்..


நிறைய குழந்தைகளுக்கு பணம் வாங்காமல் நான் ஆரம்பகாலத்தில் இருந்து மிட்டாய் கொடுத்து வருகிறேன்,  என்று அன்புடன் சொன்னார்..

நான் நீண்ட நேரம் பார்த்து கொண்டிருந்தேன் அவர் விற்பனை செய்வதை,ஒரு அம்மா மற்றும் அவரது பெண் குழைந்தையுடன் வண்டியில் வந்து நின்று அந்த மிட்டாய் தாத்தாவிடம் மிட்டாய் கேட்டனர் அவர் அழகாக ஒரு மிட்டாய் செய்து கொடுத்தார் பிறகு என் மகளுக்கு இன்று பிறந்தநாள் என்று அந்த அம்மா சொன்னதும் அவர் அந்த குழந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி பைசா எதும் வேண்டாம் என்று சொல்லி இது என்னுடைய பிறந்தநாள் பரிசு என்று அன்போடு சொன்னார் பின்னர் அவர்கள் தாத்தாவின் வாழ்த்துக்களை பெற்றுக்கொண்டு புறப்பட்டனர் (இந்த எண்ணம் பெரும் வசதி பெற்றவர்களுக்கு என்றும் வராது)

அவரின் வண்டியில் பதிவு செய்யப்பட்ட "பம்பாய் மிட்டாய் " எனும் பெயர் கேட்கும்போது யாருக்கு தான் சாப்பிடவேண்டும் என்று ஆசை வராது..

அவரை பார்த்ததும் அவருடன் பேசியதும்,ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது ...!

குறிப்பு: 

வாழ்வில் உயர்வதற்கு வயது முக்கியமல்ல எண்ணங்களும் செயல்களும் மட்டுமே..🤝🤝

Comments

KARTHIK SELVARAJ

பருத்தி தோட்டத்தை எங்கள் ஊரின் பார்த்ததும் :

கனவுகள் நினைவாகும் போது நான் நேரில் பார்த்தது👏

இன்று பார்த்தது மண்ணெண்ணெய் அடுப்பு 😊

நான் செல்லும் வழியில் பார்த்த வீட்டு பலகாரம்

நேற்று இரவு நான் பார்த்ததும் ரசித்ததும்👏